வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நகர்ப்புற திட்டமிடல் குறித்த 2 நாள் தேசிய மாநாட்டில், போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி, உள்ளூர்ப் பகுதி திட்டங்கள் மற்றும் தில்லியின் பெருந்திட்டம் 2041 பற்றிய தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும்

Posted On: 12 JUL 2023 4:17PM by PIB Chennai

நகர்ப்புற திட்டமிடல் குறித்த தேசிய மாநாட்டிற்கு மத்திய  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு  அமைச்சகம் 2023 ஜூலை 13 மற்றும் 14 தேதிகளில் புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்துள்ளது. மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், தலைமை நகரத் திட்டமிடுவோர், மாநில நகர் மற்றும் கிராமத் திட்டமிடல் துறைகள், நகர்ப்புற வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட 700 க்கும் அதிகமானோர்  2 நாள் நகர்ப்புற திட்டமிடல் தேசிய மாநாட்டில் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் புதுமையான நகர்ப்புற திட்டமிடல் நடைமுறைகளில் பல்வேறு நல்ல முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகள் காணப்படுவதால், நகர்ப்புற திட்டமிடலில் உள்ள நல்ல நடைமுறைகளை வெளிப்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை இம்மாநாடு வழங்கும். இதனை மத்திய  வீட்டுவசதி,  நகர்ப்புற மேம்பாடு,   பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை  அமைச்சர் திரு  ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைப்பார்..

மாநாட்டின் போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் கல்வி நிறுவனங்கள் பல்வேறு நகரங்களில் தாங்கள்  மேற்கொண்ட திட்டங்களைக் காட்சிப்படுத்தும்  கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியை செயல்படுத்துதல், இந்தூர் மற்றும் சென்னையில் உள்ளூர் பகுதி திட்டத்தை செயல்படுத்துதல், சூரத் மற்றும் புனேவில் நகர திட்டமிடல் திட்டத்தை செயல்படுத்துதல், ஜீரோ பள்ளத்தாக்கில் சுற்றுச்சூழல் சார்ந்தப்  பெருந்திட்ட அணுகுமுறை போன்ற சில நல்ல நடைமுறைகள் இதில் காட்சிப்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938945  

***

AD/SMB/AG



(Release ID: 1939029) Visitor Counter : 150