பிரதமர் அலுவலகம்

முஸ்லீம் உலக லீக் தலைமைச்செயலாளருடன் பிரதமர் பேச்சுவார்த்தை

Posted On: 12 JUL 2023 5:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, முஸ்லீம் உலக லீக் தலைமைச் செயலாளர் மேன்மை தாங்கிய ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசாவுடன், சமயங்களுக்கு இடையேயான உரையாடல், தீவிரவாத சிந்தனைகளுக்கு எதிரான நடவடிக்கை, உலக அமைதியை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் இந்தியா, சவுதி அரேபியா இடையேயான ஆழமான நட்புறவு குறித்து  பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேன்மை தாங்கிய ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசா இச்சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பிரதமர்  ட்விட்டரில் பதிலளித்து இருப்பதாவது;

முஸ்லீம் உலக லீக் தலைமைச் செயலாளரும், முஸ்லீம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான மேன்மை தாங்கிய ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசா-வை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. சமயங்களுக்கு இடையேயான உரையாடல், தீவிரவாத சிந்தனைகளுக்கு எதிரான நடவடிக்கை, உலக அமைதியை முன்னெடுத்துச் செல்லுதல், இந்தியா, சவுதி அரேபியா இடையேயான ஆழமான நட்புறவு குறித்து  நாங்கள் சிறப்பான முறையில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.

***

 

LK/IR/RS/AG



(Release ID: 1939020) Visitor Counter : 188