பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா - மலேசியா இடையே பாதுகாப்பு தளவாட தொழில்துறையில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், கோலாலம்பூரில் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவன மண்டல அலுவலகத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

Posted On: 11 JUL 2023 6:20PM by PIB Chennai

இந்திய பாதுகாப்புத் தளவாட தொழில்துறையின் நீடித்த வளர்ச்சியின் முக்கியத்தூணாக விளங்கும் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை அங்கீகரிக்கும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவன மண்டல அலுவலகத்தை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 2023 ஜூலை 11 (இன்று) பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

இந்த மண்டல அலுவலகம், இந்தியா-மலேசியா இடையே பாதுகாப்பு தளவாட தொழில்துறையில் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். அத்துடன் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துடன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டிற்கான கேந்திரமாகவும்மற்ற இந்திய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழிகாட்டியாகவும் இது சேவையாற்றும்.

இந்திய வம்சாவளியினர் மிகப்பெரிய எண்ணிக்கையில் வசிக்கும்  இரண்டாவது மிகப்பெரிய நாடாக உள்ள மலேசியாவில், இரு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய வம்சாவளியினருடன் பாதுகாப்பு அமைச்சர் உரையாடினார். மலேசிய நாட்டின் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், அரசியல், கலாச்சாரம் மற்றும் தொழில்துறையின் பிரபலங்கள் ஆகியோருடன் அமைச்சர் உரையாடினார். இதில் மலேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு வி சிவக்குமார், தொழில்முனைவு மற்றும் கூட்டுறவு வளர்ச்சித்துறைக்கான துணை அமைச்சர் திருமதி. சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒடிசி நடனம் உள்ளிட்ட பழமையான இந்திய பாரம்பரிய, கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் மலேசியாவில் நடைபெற்றதையும், பிரபல மலேசிய கலைஞர்களின் கர்நாடக மற்றும் ஹந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகளையும் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.

 SM/IR/RS/KRS



(Release ID: 1938782) Visitor Counter : 117


Read this release in: English , Urdu , Marathi , Hindi