வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
என்.எஸ்.சி.எஸ்.டி.ஐ-யின் அங்கீகாரத்தைப் பெற கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதலில் கவனம் செலுத்துங்கள்: ஹர்தீப் சிங் பூரி
இடுகை இடப்பட்ட நாள்:
11 JUL 2023 3:42PM by PIB Chennai
நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் பல்வேறு பயிற்சி நிறுவனங்களின் அம்சங்கள் குறித்து மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று ஆய்வு செய்தார். நிறுவன அமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டின் தற்போதைய நிலை, நிறுவனத்தின் முக்கிய நிபுணத்துவம், நிதி நிலைத்தன்மைக்கான திட்டங்கள் மற்றும் குடிமைப் பணியாளர்களுக்கான ஐகாட் ( iGoT ) தளத்தில் ஆன்லைனில் பயிலக் கூடிய படிப்புகளின் விவரங்கள் போன்று பயிற்சி நிறுவனங்களின் பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. "குடிமைப்பணி பயிற்சி நிறுவனங்களுக்கான தேசிய தரநிலைகள்" (என்எஸ்சிஎஸ்டிஐ) அங்கீகாரத்தைப் பெற நிறுவனங்களை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. .இந்தத் தரநிலைகள் 21 ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள பயிற்சி நிறுவனங்களைத் தயார்படுத்தும் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார்.
தில்லி மெட்ரோ ரயில் அகாடமி உட்பட அமைச்சகத்தின் கீழ் உள்ள எட்டு பயிற்சி நிறுவனங்களை ஆய்வு செய்வதற்காக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இன்று ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தின் நோக்கம் இந்த நிறுவனங்களின் தற்போதைய திறனை மதிப்பிடுவதும், மிஷன் கர்மயோகியின் ஒட்டுமொத்த நோக்கங்களுடன் அவற்றை சீரமைப்பதும் ஆகும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் எஸ் பூரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துறையின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, திறன் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் திரு பிரவீன் பர்தேஷி, 8 பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938681
*****
SM/SMB/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1938746)
வருகையாளர் எண்ணிக்கை : 164