சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
லக்னோ, தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் பயிற்சியாளர்களுக்கான பயிற்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது
प्रविष्टि तिथि:
11 JUL 2023 12:38PM by PIB Chennai
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள டாக்டர் ஆர்எம்எல் தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் 2023 ஜூலை 6முதல் 8 வரை பயிற்சியாளர்களுக்கானப் பயிற்சி திட்டத்திற்கு புதுதில்லியில் உள்ள தேசியப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 45 பேர் பங்கேற்றனர்.
பத்து அமர்வுகளாக நடைபெற்ற இப்பயிற்சியில், பேராசிரியர் பிபி பாண்டே, வழக்கறிஞர் அப சிங்கல் ஜோஷி, வழக்கறிஞர் ரேணு மிஷ்ரா, டாக்டர் கே ஏ பாண்டே, டாக்டர் அபரஜிதா பட், திரு சம்கார் சிங் ஆகியோர் பாலின அடிப்படையிலான வன்முறை முதல் சைபர் குற்றம் வரை பல்வேறு சமூக - சட்ட விவகாரங்கள் குறித்தும், சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938614
***
AD/IR/RS/GK
(रिलीज़ आईडी: 1938697)
आगंतुक पटल : 163