பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மலேசிய பாதுகாப்பு அமைச்சரை கோலாலம்பூரில் சந்தித்தார்; அத்துடன் மலேசிய பிரதமரையும் சந்தித்தார்
Posted On:
10 JUL 2023 4:39PM by PIB Chennai
இந்தியாவின் கிழக்கு கொள்கையை மேலும் ஊக்குவிக்கவும், மலேசியாவுடனான இரு தரப்பு உறவை வலுப்படுத்தவும், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு டத்தோ ஸ்ரீ முகமது ஹசனை கோலாலம்பூரில் 2023 ஜூலை 10 அன்று சந்தித்தார். அத்துடன் அந்நாட்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் பின் இப்ராஹீம், மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தீரஜா டாக்டர் ஜாம்பரி அப்த் காதிர் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.
2023- ஜூலை-9 அன்று கோலாலம்பூர் சென்ற திரு ராஜ்நாத் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சகம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு டத்தோ ஸ்ரீ முகமது ஹசனுடன் பேச்சு நடத்தினார்.
தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகளை காண்பது இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான இரு தரப்பினரும் விவாதித்தனர்.
நடப்பாண்டு இறுதியில் இந்தியாவை மலேசியா –இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுக்கூட்டத்தை நடத்துவதற்கு இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். இந்திய பாதுகாப்புத் தளவாட தொழில் துறையின் திறன் குறித்து திரு ராஜ்நாத் சிங் அப்போது எடுத்துரைத்தார். கடந்த 1993-ம் ஆண்டு இந்தியா- மலேசிய இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கும் இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் அளித்தனர். இந்தத் திருத்தத்தின் மூலம் பரஸ்பரம், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் மேலும் விரிவாக்கும் செய்ய இயலும்.
அதன் பின்னர், மலேசிய பிரதமர் திரு டத்தோ ஸ்ரீ அன்வர் பின் இப்பராஹீமை பாதுகாப்பு அமைச்சர் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே வலிமையான கலாச்சார பிணைப்புக்கு மலேசிய பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
***
AP/IR/RS/KRS
(Release ID: 1938497)
Visitor Counter : 160