வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நகர்ப்புற 20 (யு20) மேயர்கள் உச்சி மாநாடு, ஜி 20 தலைவர்களிடம் அறிக்கையை ஒப்படைப்பததுடன் நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
10 JUL 2023 1:56PM by PIB Chennai
காந்திநகரின் அகமதாபாதில் ஜூலை 7-8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நகர்ப்புற 20 மேயர்கள் உச்சி மாநாடு, மேயர்களிடமிருந்து ஜி 20 தலைவர்களிடம் அறிக்கையை ஒப்படைப்பததுடன் நிறைவடைந்தது. உலகெங்கிலும் உள்ள 105 நகரங்களால் இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை பெறப்பட்ட எந்த யு20 அறிக்கையைவிடவும் அதிக எண்ணிக்கையிலான ஒப்புதல்கள் இதற்குக் கிடைத்துள்ளன. மேலும், முந்தைய அறிக்கைகளுக்கான ஒப்புதல்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமுமாகும்.
யு20 நகரங்களால் கூட்டாக அடையாளம் காணப்பட்ட ஆறு முன்னுரிமைகளுக்கான செயல் திட்டங்களால் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான நடத்தைகளை ஊக்குவித்தல், பருவநிலை நிதியை அதிகப்படுத்துதல், உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், நீர் பாதுகாப்பை உறுதி செய்தல், டிஜிட்டல் நகர்ப்புற எதிர்காலத்தை ஊக்குவித்தல், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான கட்டமைப்பை மீண்டும் உருவாக்குதல் ஆகியவை இந்த முன்னுரிமைகளில் அடங்கும். "வசுதைவ குடும்பகம்" அல்லது ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற ஜி 20 மையப்பொருளுக்கு இசைவாக இந்த அறிக்கை உள்ளது.
இந்நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேப்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, "நீடித்ததன்மை, அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் பருவநிலை பின்னடைவு தொடர்பான பல்வேறு உலகளாவிய இலக்குகளை அடைவதற்கு நகரங்கள் மையமாக இருக்கும்." என்றார். ‘நகர்ப்புறத் தொகுதியின்’ சக்தி குறித்தும் மாற்றத்தின் முகவர்கள் என்ற நிலையில், உலகளாவிய வளர்ச்சியின் சவால்களை நகரங்கள் மூலம் எதிர்கொள்வது குறித்தும் அமைச்சர் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
பிரதிநிதிகளின் பலத்த கரவொலிக்கிடையே திரு ஹர்தீப் சிங் பூரி, திரு அமிதாப் காந்த் ஆகியோரிடம் அகமதாபாதின் மாண்புமிகு மேயர், அறிக்கையை வழங்கினார்.
இந்த யு 20 தொடர் நிகழ்வு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது, பல அம்சங்களில் முந்தைய அனைத்துத் தொடர் நிகழ்வுகளையும் விஞ்சியுள்ளது என்பதை இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்ற நகர மேயர்கள் மற்றும் பிரதிநிதிகள், உயரதிகாரிகள் மற்றும் அறிவுத்துறையினர் உட்பட அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938397
***
AP/SMB/GK
(रिलीज़ आईडी: 1938468)
आगंतुक पटल : 216