மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

பிரமரின் மத்ஸய சம்பதா திட்டத்தின் கீழ், மீன் நோய்கள் பற்றி விரைவாகப் புகாரளிப்பதற்கு மொபைல் செயலி உருவாக்கம்

Posted On: 09 JUL 2023 4:24PM by PIB Chennai

விலங்கு புரதம் மற்றும் ஒமேகா 3-கொழுப்பு அமிலங்களின் ஆரோக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக மீன் கருதப்படுகிறது.  ஊட்டச்சத்து குறைபாட்டைத் தணிக்க மகத்தான ஆற்றலை வழங்குகிறது. மீன் வளர்ப்பு வேகமாக வளர்ந்து வரும் உணவு உற்பத்தித் துறைகளில் ஒன்றாகும்.  புரதத்திற்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.  மீன்வளத்துறை  நாட்டில் உள்ள சுமார் 3 கோடி மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தையும் வேலை வாய்ப்பையும் வழங்குகிறது. இத்துறையின் வளர்ச்சிக்கான அபரிமிதமான சாத்தியக்கூறுகளை முன்னறிவித்து, நீலப் புரட்சியைக் கொண்டுவருவதற்காக, மத்திய அரசு, ரூ 20,050 கோடி முதலீட்டுடன் பிரதமரின்  மத்ஸய சம்பதா திட்டம்  என்ற முதன்மைத் திட்டத்தை அறிவித்துள்ளது.

மீன் வளர்ப்பின் வளர்ச்சிக்கு நோய்கள் கடுமையான தடையாக உள்ளது,  நீர்வாழ் விலங்கு நோய்களால் விவசாயிகளால் பெரும் பொருளாதார இழப்புகள் பதிவாகியுள்ளன. ஆரம்பகால கண்டறிதல் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. நோய் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்  மூலம் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகம், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் ஆகியவற்றின் மூலம் நீர்வாழ் விலங்கு நோய்களுக்கான ஒரு லட்சிய தேசிய கண்காணிப்புத் திட்டம்  ஆதரிக்கப்பட்டது.  இந்தத் திட்டம் மீன் வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த 14 மாநிலங்களில் தொடங்கப்பட்டது .

பிப்ரவரி 27, 2023 அன்று சென்னையில் மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களால் இந்தத்  திட்டம்  வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.

விவசாயிகளை மேலும் வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், “மீன் நோயைப் புகாரளி” என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி சமீபத்தில் ஜூன் 28, 2023 அன்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களால் தொடங்கப்பட்டது. புதுமையான செயலியைப் பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் உள்ள மீன், இறால் மற்றும் மொல்லஸ்க்களில் ஏற்படும் நோய்களைக் கள மட்ட அலுவலர்கள் மற்றும் மீன் சுகாதார நிபுணர்களிடம் தெரிவிக்கலாம் மற்றும் தங்கள் பண்ணைகளில் ஏற்படும் நோய் பிரச்சனையை விரைவாகத் தீர்க்க அறிவியல் ஆலோசனைகளைப் பெறலாம். மீன் விவசாயிகள், கள அளவிலான அதிகாரிகள் மற்றும் மீன் சுகாதார நிபுணர்களை இணைக்கும் மைய தளமாக இந்த செயலி  இருக்கும்.

***

AD/PKV/DL



(Release ID: 1938323) Visitor Counter : 110