மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தேசிய மீன் விவசாயிகள் தினம் 2023 கொண்டாட்டம்: மீன்வளங்களின் ஸ்டார்ட்-அப் மகத்தான சாதனைகள் மற்றும் மீன்வள ஸ்டார்ட்-அப் மாநாடு
Posted On:
08 JUL 2023 11:13AM by PIB Chennai
ஸ்டார்ட்-அப் இந்தியா மையம் மற்றும் டிபிஐஐடி ஆகியவற்றுடன் இணைந்து மீன்வள சுற்றுச்சூழல் அமைப்பில் சிறப்பான தாக்கத்தை உருவாக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைக் கண்டறிந்து, விருது வழங்கி, அங்கீகரிப்பதற்காக மீன்வள ஸ்டார்ட்-அப்களின் மகத்தான சாதனைகளை மீன்வளத் துறைத் தொடங்கியது. இந்தியாவில் மீன்வள சுற்றுச்சூழல் பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீன்வள ஸ்டார்ட்-அப்கள் உள்ளன.
மீன்வள ஸ்டார்ட்-அப் மகத்தான சவால் நான்கு பிரச்சனை அறிக்கைகளின் அடிப்படையில் விண்ணப்பங்களை கோரியது. இந்த சவாலுக்கு 121 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தீவிரமான ஆய்வுக்குப் பிறகு, 12 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்த சவாலின் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மாண்புமிகு மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, மாண்புமிகு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்கள் டாக்டர் எல்.முருகன் மற்றும் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் ஜூலை 10, 2023-ல் நடைபெறும் தேசிய மீன் விவசாயிகள் தினத்தன்று கௌரவிப்பார்கள்.
பிரதான் மந்திரி மத்ஸய சம்பதா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து வளர்க்க உதவும் வகையில் ரூ. 2 லட்சம் ரொக்க நிதி உதவி வழங்கப்படும்.
மகாபலிபுரத்தில் ஜூலை 10, 2023-ல் நடக்கவிருக்கும் தேசிய மீன் விவசாயிகள் தின விழாவில் நாடு முழுவதிலுமிருந்து 30 தனிச் சிறப்பு மிக்க ஸ்டார்ட்-அப்களின் கண்காட்சி நடைபெறும். இது நாட்டில் உள்ள மீன்வள புதுமையாளர்களில் சிறந்தவற்றைக் காட்சிப்படுத்துகிறது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேலும் வளர்க்க உதவும் வகையில் நிர்வாக அமர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
***
AD/ASD/DL
(Release ID: 1938147)
Visitor Counter : 221