பாதுகாப்பு அமைச்சகம்

தற்சார்பு இந்தியா; இந்திய கடலோரக் காவல்படைக்காக மேம்படுத்தப்பட்ட இரண்டு டோர்னியர் விமானங்களுக்கான ரூ.458 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம், எச்ஏஎல் ஆகியவை கையெழுத்து

Posted On: 07 JUL 2023 3:59PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகம், ஜூலை 07, 2023 அன்று புது தில்லியில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் இந்திய கடலோரக் காவல்படைக்கு இரண்டு டோர்னியர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் புதுதில்லியில் இன்று கையெழுத்தானது. ரூ 458.87 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், பாதுகாப்பு அமைச்சகமும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும்  கையெழுத்திட்டன.

இந்த விமானத்தில் கண்ணாடி காக்பிட், கடல் ரோந்து ராடார், எலக்ட்ரோ ஆப்டிக் இன்ஃப்ரா-ரெட் சாதனம், மிஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற பல மேம்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இந்திய கடலோர காவல் படையின் கடல் பகுதி வான்வழி கண்காணிப்பு திறனை மேலும் மேம்படுத்தும். .

டோர்னியர் விமானங்கள் கான்பூரில் உள்ள எச்ஏஎல் (போக்குவரத்து விமானப் பிரிவு) இல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன, மேலும் அரசின்  ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு இணங்க, பாதுகாப்பில் தற்சார்பை அடைவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

***

 SM/PKV/KRS



(Release ID: 1938045) Visitor Counter : 104