பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜப்பான் முன்னாள் பிரதமரும், ஜப்பான்-இந்தியா கூட்டமைப்பு தலைவருமான மேன்மை தங்கிய திரு யோஷிஹிடே சுகாவை பிரதமர் சந்தித்தார்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கணேஷா குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் மேன்மை தங்கிய
திரு. சுகா இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்

உலகளாவிய கூட்டாண்மை மற்றும் நட்புறவை வலிமைப்படுத்துவது குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய "கணேஷா நோ கை" குழு மற்றும் கெய்டன்ரன் உறுப்பினர்களுடன் பிரதமர் ஆக்கப்பூர்வமான பேச்சுகளில் ஈடுபட்டார்

Posted On: 06 JUL 2023 7:11PM by PIB Chennai

ஜப்பான் முன்னாள் பிரதமரும், ஜப்பான்-இந்தியா கூட்டமைப்பு தலைவருமான மேன்மை தங்கிய திரு யோஷிஹிடே சுகாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அடங்கிய "கணேஷா நோ கை" குழு மற்றும் கெய்டன்ரன் (ஜப்பான் வர்த்தக கூட்டமைப்பு) உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் திரு சுகா இந்தியா வருகை தந்துள்ளார்.

ஜப்பான்-இந்தியா கூட்டமைப்பு தலைவராக முதல் முறையாக இந்தியா வந்துள்ள திரு சுகாவை பிரதமர் வரவேற்றார். அப்போது இரு தலைவர்களும் முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, ரயில்வே, இருநாட்டு மக்களிடையேயான தொடர்பு, திறன் மேம்பாட்டு கூட்டாண்மை உள்ளிட்ட ஜப்பான்-இந்தியா இடையே உலகளாவிய கூட்டாண்மை மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

இரு நாடுகளுக்கிடையே நாடாளுமன்ற தொடர்பை வலுப்படுத்துவது குறித்து நாடாளுமன்ற குழும உறுப்பினர்கள் அடங்கிய "கணேஷா நோ கை" உறுப்பினர்களுடன் பிரதமர் ஆக்கப்பூர்வமான பேச்சுகளில் ஈடுபட்டார். ஜப்பானில் யோகா மற்றும் ஆயுர்வேதா பிரபலமாகி வருவதை வரவேற்ற அவர்கள், இந்தியா-ஜப்பான் இடையே கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

கெய்டன்ரன் உறுப்பினர்களை வரவேற்ற பிரதமர், வர்த்தக சூழல் முறையை மேம்படுத்த நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து  அவர் எடுத்துரைத்தார். ஜப்பான் முதலீட்டாளர்கள் இந்தியாவில் தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்துமாறும் ஒத்துழைப்பில் புதிய வழிவகைகளை காணுமாறும்  அவர் அழைப்பு விடுத்தார்.

***

(Release ID: 1937816)

SM/IR/AG/KRS

 


(Release ID: 1937843) Visitor Counter : 136