விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வேளாண் அமைச்சகம் ஜூலை 7-8 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களுக்கு சிந்தனை முகாமை ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 06 JUL 2023 5:37PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் 2023 ஜூலை 7-8 ஆகிய தேதிகளில் பூசாவில் உள்ள என்ஏஎஸ்சி வளாகத்தில் இரண்டு நாள் சிந்தனை முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், இணையமைச்சர்கள் திரு.கைலாஷ் சவுத்ரி, ஷோபா கரந்த்லாஜே ஆகியோர் கலந்து கொள்கின்றனர். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற விவசாயம், விவசாயத்தில் தனியார் பங்களிப்பை மேம்படுத்துதல், விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துதல், விவசாயம் செய்வதை எளிதாக்குதல் போன்றவை இந்த முகாமின் நோக்கமாகும்.

இந்த இரண்டு நாள் முகாமில் விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் புதுமையான யோசனைகள் வழங்கப்படவுள்ளன. விவசாயத்தில் எதிர்காலத் தேவைகளை திட்டமிடவும், ஏற்றுமதியை அதிகப்படுத்தவும், இந்திய விவசாயத்தை நவீனப்படுத்தவும் இந்த முகாமில் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

i) விவசாயத்தை தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாற்றுவதற்கான உத்திகளை உருவாக்குதல்

ii) ஊட்டச்சத்து மேலாண்மையுடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்தல், மண் வளத்தை மேம்படுத்துதல்

iii) இயற்கை விவசாய முறைகள்

iv) டிஜிட்டல் மயமாக்குதலில் கவனம் செலுத்துதல்

v) தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தியை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து சந்தைப்படுத்தலை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் இந்த 2 நாள் முகாமில் கவனம் செலுத்தப்படும்.  

***


(Release ID: 1937841) Visitor Counter : 129