அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆயுஷ்மான் பாரத் திட்டமே தற்போது வரை உலகின் மிகச் சிறந்த சுகாதாரக் காப்பீடுத் திட்டமாகத் திகழ்வதாகவும், இந்தப் புகழ் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் எனவும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
Posted On:
30 JUN 2023 5:32PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் திட்டமே தற்போது வரை உலகின் மிகச் சிறந்த சுகாதாரக் காப்பீடுத் திட்டமாகத் திகழ்வதாகவும், இந்தப் புகழ் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மேலும் காப்பீடு எடுப்பதற்கு முன்பு இருந்த நோய்களுக்கும் இந்த காப்பீடு மூலம் சிகிச்சை பெற வழிவகை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர் தினக் கருத்தரங்கில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, சுகாதாரத் தேவையை அறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் டிஜிட்டல் சுகாதாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார். நோய் பாதிப்பு இருந்தாலும் காப்பீடு செய்துகொள்ளும் வசதி உள்ள ஒரே காப்பீடுத் திட்டம் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் தான் என்று தெரிவித்தார். இந்தக் காப்பீடுத் திட்டத்தை அமல்படுத்தும் முதல் யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் திகழ்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம், தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச சிகிச்சையை சிறந்த மருத்துவமனைகளில் அளிக்க வகைசெய்வதாக அவர் கூறினார். இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் ஆரம்பநிலையில் அரசு தற்போது இருப்பதால், தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் புகுத்தப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த சுகாதாரத் காப்பீடுத் திட்டம் உலகின் மிகச்சிறந்த சுகாதார மாதிரித் திட்டமாக உருமாறும் என்றும் கூறினார்.
கொரோனா பெருந்தொற்றுக் காலம், மக்களிடையே சுகாதாரக் காப்பீடு எடுத்துகொள்வதன் அவசியத்தை கற்பித்திருப்பதாகவும், பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறைகள் குறித்து தெளிவுபடுத்தியிருப்பதாகவும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். கொரோனா காலத்தில் இந்தியாவின் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்டவற்றில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் தொழில்நுட்பங்களை அடையாளம் காண மேற்கத்திய நாடுகள் முயற்சி மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் தற்போது 350 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், உலகளவில் ஸ்டார்டப்-அப் நிறுவனங்கள் தொடங்குவதில், 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்வதாகவும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
***
AD/ES/AG/KRS
(Release ID: 1936505)
Visitor Counter : 172