பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா- தான்ஸானியா கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 2-வது கூட்டம் அருஷாவில் நடைபெற்றது

Posted On: 29 JUN 2023 4:40PM by PIB Chennai

இந்தியா- தான்ஸானியா கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 2-வது கூட்டம், அருஷாவில்  2023 ஜூன் 28  மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியப் பாதுகாப்புத்துறை இணைச்செயலாளர்  திரு. அமிதாப் பிரசாத்  தலைமையிலான இந்தியக் குழு கலந்துகொண்டது. இந்தியக் குழுவில்,   பாதுகாப்பு அமைச்சகம்  மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்தான்ஸானியாவிற்கான  இந்தியத் தூதர் திரு. பினை எஸ். பிரதானும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில், பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து  இதில்  ஆலோசிக்கப்பட்டதுஇந்தியப் பாதுகாப்புத் துறையின் ராணுவ உபகரண உற்பத்தி முதல்  ஏற்றுமதி வரையிலான பல்வேறு அம்சக்ஙள் குறித்து இந்தியக் குழுவினர் எடுத்துரைத்தனர். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான 5 ஆண்டு கால செயல்திட்டத்திற்கு இரு தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த செயல்திட்டத்தில், இருதரப்பு ராணுவப் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துதல், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூட்டத்தின் ஒருபகுதியாகஇந்தியப்  பாதுகாப்பு பொதுத்துறை நிறுவன பிரதிநிதிகள், தான்ஸானியா தரப்பினருடன்   சிறப்பு ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தக்   கூட்டுப்  பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுக்  கூட்டத்தில்  இந்தியக் குழு பங்கேற்றதுஇந்தியா-தான்ஸானியா இடையேயான பாதுகாப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

                                                                                ****
SMB/ES/KPG

 



(Release ID: 1936264) Visitor Counter : 115