பிரதமர் அலுவலகம்
குமார்காட்-ல் நடந்த உல்டா ரத யாத்திரையில் ஏற்பட்ட விபத்தால் பிரதமர் வேதனை
பாதித்தவர்களுக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகை அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUN 2023 9:12PM by PIB Chennai
திரிபுரா மாநிலத்தின் குமார்காட்டில் நடந்த உல்டா ரத யாத்திரையின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதித்தவர்களுக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (பிஎம்என்ஆர்எஃப்) திரு. மோடி கருணைத் தொகை அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தொடர் ட்வீட்களில், பிரதமர் கூறியது;
“குமார்காட்டில் உல்டா ரத யாத்திரையின் போது நடந்த விபத்து வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதித்தவர்களுக்கு நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது: பிரதமர் @நரேந்திர மோடி
“திரிபுராவில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @நரேந்திர மோடி
---
PKV/AM/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1936208)
வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam