குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவரின் பக்ரித்  பண்டிகை வாழ்த்துக்கள்

प्रविष्टि तिथि: 28 JUN 2023 5:03PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு பக்ரீத் பண்டிகையையொட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஈத் பண்டிகையையொட்டி, அனைத்து மக்களுக்கும், குறிப்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகையாகும்.  தியாகம் மற்றும் மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் பாதையை பின்பற்ற இந்தப் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது.

இந்த நாளில், சமுதாயத்தில் பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பரப்ப நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.” என்று கூறியுள்ளார்.

(Release ID: 1935942)

AP/PKV/RJ/KRS


(रिलीज़ आईडी: 1935992) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi