குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டுமக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 28 JUN 2023 3:57PM by PIB Chennai

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“இந்தப் புனித திருநாளில் இந்தியர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் திருநாள் என்பது தியாகம் மற்றும் சுயநலமின்மையின் அடையாளமாகத் திகழ்வதுடன், நம்முடைய நன்றியை வெளிப்படுத்துவதற்கான விழாவாகவும் திகழ்கிறது. குடும்ப உறுப்பினர்களும், சமூகத்தினரும்  ஒன்றாக இணைந்து தங்களது மகிழ்ச்சியை வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் விழாவாகும். இந்த ஈகைத் திருநாள் அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கட்டும்”.

----

(Release ID: 1935901)

AP/ES/KPG/KRS


(रिलीज़ आईडी: 1935985) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Kannada