தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பங்களை பதினைந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க தொழிலாளர்களுக்கு கடைசி வாய்ப்பையும் மற்றும் ஊதிய விவரங்களை வேலைவழங்குபவர்கள் பதிவேற்றம் செய்ய மூன்று மாத கால அவகாசமும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு வழங்குகிறது

Posted On: 26 JUN 2023 9:29PM by PIB Chennai

அதிக ஊதியத்தில் ஓய்வூதியத்திற்கான விருப்பம் / கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான ஆன்லைன் வசதி தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 04.11.2022 தேதியிட்ட உத்தரவுக்கு இணங்கி தகுதி உடைய ஓய்வூதியதாரர் / உறுப்பினர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதி 26.02.2023 அன்று தொடங்கப்பட்டு 03.05.2023 வரை மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், தொழிலாளர்களின் நிலைகளைக் கருத்தில் கொண்டு, தகுதி உடைய ஓய்வூதியதாரர் / உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கு நான்கு மாத கால அவகாசம் வழங்குவதற்காக, 26.06.2023 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. 26.06.2023 வரை 16.06 லட்சம் விருப்பத்தேர்வு / கூட்டு விருப்பங்களின் சரிபார்ப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தகுதி உடைய ஓய்வூதியதாரர்/உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நீக்க 15 நாட்கள் கடைசி அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்படி, பணியாளர்கள் விருப்பம் / கூட்டு விருப்பங்களை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 11.07.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உங்களது வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் விவரங்களை புதுப்பித்தலில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விருப்பம் / கூட்டு விருப்பத்தின் சரிபார்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதில் சிரமத்தை எதிர்கொள்ளும் எந்தவொரு தகுதியான ஓய்வூதியதாரர் / உறுப்பினர், உடனடியாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் இணையதள புகார் மேலாண்மை அமைப்பில் தீர்வுக்காக புகார் செய்யலாம். 'அதிக ஊதியத்தில் உயர் ஓய்வூதியப் பலன்கள்' என்ற புகார் பிரிவைத் தேர்வு செய்து, புகாரை சமர்ப்பிக்கலாம். இது போன்ற புகார்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் சரியான பதிவாகும்.

இதற்கிடையே, வேலைவழங்குபவர்கள் மற்றும் வேலைவழங்குபவர்கள் சங்கங்களிலிருந்து பல கடிதங்கள் வந்துள்ளன. அவற்றில் விண்ணப்பதாரர் ஓய்வூதியம் பெறுவோர் / உறுப்பினர்களின் ஊதிய விவரங்களை பதிவேற்றுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கை கருணையுடன் பரிசீலிக்கப்பட்டு, 30.09.2023க்குள் ஆன்லைனில் ஊதிய விவரங்களைச் சமர்ப்பிக்க, மேலும் மூன்று மாத கால அவகாசம் வேலைவழங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

******

(Release ID: 1935487)


(Release ID: 1935591) Visitor Counter : 274