குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

2023, ஜூன் 27 அன்று 'உத்யாமி பாரத் - எம்எஸ்எம்இ தினம்' விஞ்ஞான் பவனில் கொண்டாடப்பட உள்ளது

Posted On: 24 JUN 2023 10:57AM by PIB Chennai

சர்வதேச எம்எஸ்எம்இ தினத்தையொட்டி, எம்எஸ்எம்இ அமைச்சகம் 2023 ஜூன் 27 அன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் ‘உத்யமி பாரத் (தொழில் முயற்சி இந்தியா) - எம்எஸ்எம்இ தினத்தைக்’ கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய எம்எஸ்எம்இ அமைச்சர் திரு நாராயண் ரானே தலைமை விருந்தினராகவும், மத்திய இணை அமைச்சர் (எம்எஸ்எம்இ) திரு  பானு பிரதாப் சிங் வர்மா கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, எம்எஸ்எம்இக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சாம்பியன்ஸ்  2.0 இணையப்பக்கம், தொகுப்புத்  திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப மையங்களின் ஜியோ-டேகிங்கிற்கான செல்பேசி செயலி போன்ற பல்வேறு முன்முயற்சிகளை எம்எஸ்எம்இ அமைச்சகம் தொடங்கும். மேலும்,  இந்நிகழ்ச்சியின் போது 'எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 2.0' க்கான முடிவுகள் அறிவிக்கப்படும் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கான 'எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 3.0' தொடங்கப்படும். இவைதவிர, குறையற்றதாக, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக தங்கம் மற்றும் வெள்ளி சான்றளிக்கப்பட்ட எம்எஸ்எம்இக்களுக்கு சான்றிதழ் விநியோகம், டிஜிட்டல் முறையில் ரூ. 400 கோடி பணப்பரிமாற்றம், பிரதமரின் வேலை உருவாக்கத் திட்டத்தின்கீழ் 10,075  பயனாளிகளுக்கு உத்தரவாதத் தொகைக்கான மானியம் வழங்குதல் ஆகியவையும் இந்த நிகழ்ச்சியில் அடங்கும்.  மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்  இந்நிகழ்ச்சியில் கையெழுத்தாகும்.

***

AD/SMB/DL(Release ID: 1934999) Visitor Counter : 155