எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாங்கனிஸ் தாது இந்தியா நிறுவனம் தனது 61-வது நிறுவனத் தினத்தைக் கொண்டாடியது

प्रविष्टि तिथि: 23 JUN 2023 1:28PM by PIB Chennai

மாங்கனிஸ் தாது இந்தியா நிறுவனம் (மாங்கனிஸ் ஓர் இந்தியா லிமிடெட்) 22-ந் தேதி அன்று தனது 61-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. உருக்கு அமைச்சகத்தின் செயலாளர் திரு.நாகேந்திர நாத் சின்ஹா, தலைமை விருந்தினராகப் பங்கேற்று நிறுவனத்தைப் பார்வையிட்டார்.

கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செயலாளர், எம்ஓஐஎல் நிறுவனம் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வாழ்த்துத் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக நிறுவனம் உற்பத்தியை அதிகரித்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ஏ.கே.சக்சேனா கூறியுள்ளார். நடப்பு நிதியாண்டில் உற்பத்தியில் சாதனைப் படைக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. திரு.பவன்தீப் ரஞ்சன், அருனிதா காஞ்சிலால், திரு.கௌரவ் சர்மா ஆகியோரின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

61-வது நிறுவன தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 60,000 மரக்கன்றுகளை நடும் இயக்கம், ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை எம்ஓஐஎல்-ன் அனைத்து சுரங்க அலுவலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

******

(Release ID: 1934726)

AP/PKV/RR/KRS


(रिलीज़ आईडी: 1934803) आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu