பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
சர்வதேச யோகா தினத்திற்காக ஆயுஷ் அமைச்சகத்திற்கு 34,000யோகா பாய்களை டிரைஃபெட் வழங்குகிறது
प्रविष्टि तिथि:
20 JUN 2023 3:58PM by PIB Chennai
பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த கைவினைஞர்களின் மேம்பாடு மற்றும் அவர்களது அற்புதமான வேலைத்திறன் ஆகியவற்றை பறைசாற்றும் நோக்கத்துடன் ஆற்றல்மிகு முன் முயற்சியாக, இந்திய பழங்குடியின கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு டிரைஃபெட் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து 34,000 யோகா பாய்களை வழங்குகிறது.
இந்த கூட்டுமுயற்சி சர்வதேச யோகா தினத்தையொட்டி பழங்குடியின சமுதாயத்தினரின் மேம்பாடுக்கு வழிவகுப்பதுடன் இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த முன் முயற்சி பழங்குடியின சமுதாயத்தினரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதுடன் அவர்களது தனித்துவமான கலைப் பாரம்பரியங்களை மேம்படுத்தும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்களிடமிருந்து இந்த 34,000 யோகா பாய்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியப் பழங்குடியின மக்களின் கலாச்சார பாரம்பரியத்தை இந்த பாய்கள் வெளிப்படுத்தும்.
சர்வதேச யோகா தினத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் பயிலரங்குகள், பயிற்சி முகாம்கள் போன்றவற்றுக்கு இந்த பாய்களை ஆயுஷ் அமைச்சகம் பயன்படுத்தும். யோகா ஆர்வலர்களுக்கும் பழங்குடியின கலைஞர்களுக்குமிடையே வலுவான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இந்த பாய்கள் அமைந்துள்ளன.
***
SM/PKV/AG/KRS
(रिलीज़ आईडी: 1933703)
आगंतुक पटल : 194