வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பொதுசுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு குறித்த 2 நாள் தேசிய பயிலரங்கு

Posted On: 19 JUN 2023 1:46PM by PIB Chennai

மத்திய பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு குறித்த திருத்தியமைக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை இறுதி செய்வதற்கான 2 நாள் தேசிய பயிலரங்கை புதுதில்லியில் வெற்றிகரமாக நடத்தியது.  இந்த அறிக்கை குறித்த விவரங்கள் குறித்து மாநில நகரங்களின் பிரதிநிதிகளுடன் விவாதித்து அவர்களுடைய  பின்னூட்டத்தையும், கருத்துக்களையும் கேட்டறிந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலாளர்  திரு மனோஜ் ஜோஷி தலைமை தாங்கினார்.

நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு குறித்த தற்போதைய அறிக்கை 1999-ஆம் ஆண்டும் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த அறிக்கை 2005-ஆம் ஆண்டும் வெளியிடப்பட்டன. அம்ருத், அம்ருத் 2.0 போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நகர்ப்புற நீர் விநியோகத் திட்ட அமலாக்கம் வடிவமைப்பு திட்டமிடுதல் ஆகியவற்றுக்கான வழிகாட்டு ஆவணமாக அந்த அறிக்கை பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையிலும், நகர்ப்புற நீர் விநியோகத்துறையில் உள்ள பெரிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அலுவலகம் தற்போதுள்ள நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு குறித்த அறிக்கையை திருத்தியமைக்கவும், புதுப்பிக்கவும் முடிவு செய்தது. இந்த அறிக்கையை அமெரிக்க நீர்வளத்துறை வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.

குழாய் மூலம் 24 மணிநேரமும் குடிநீரை வழங்குவது குறித்த திட்டமிடல் மற்றும் வடிவமைப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

*** 

SM/IR/KPG/KRS


(Release ID: 1933476) Visitor Counter : 146