பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட் அப் நீடித்திருப்பதற்கு நிர்வாக உத்திகள் முக்கியமானவை; இந்தியாவில் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் இயக்கத்தின் முன்னோடியாக இருக்கும் ஜம்மு-காஷ்மீருக்குப் பாராட்டு: டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 16 JUN 2023 5:02PM by PIB Chennai

ஸ்டார்ட் அப் நீடித்திருப்பதற்கு நிர்வாக உத்திகள் முக்கியமானவை என்றும் இந்தியாவில் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் இயக்கத்தின் முன்னோடியாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பாராட்டுக்குரியது என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் உள்ள இந்திய நிர்வாகவியல் கல்விக் கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், இந்த சகாப்தம், புதிய கண்டுபிடிப்புகள், புதிய சிந்தனைகளுக்குரியது என்றார். புதிய சிந்தனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியடைய, நீடித்திருக்க, அனைத்துவகையான தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியை பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு வழங்கிவருகிறது என்று  அவர் கூறினார்.

ஜம்மு ஐஐஎம் கல்விக் கழகத்திலிருந்து இன்று பட்டம் பெறும் ஒருவரைபோல், நிர்வாகவியல் வல்லுநர்கள், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஸ்டார்ட் அப் தொழில் புரட்சிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

AP/SMB/RS/KRS


(रिलीज़ आईडी: 1932960) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu