உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

புதுதில்லியில் நடைபெறும் உலக உணவு இந்தியா மாநாட்டில் வெளிநாடுகள் பங்கேற்பது குறித்து இந்தியாவில் உள்ள அந்நாடுகளின் தூதர்களுடன் வட்டமேஜை கூட்டத்திற்கு உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 15 JUN 2023 7:25PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெறும் உலக உணவு இந்தியா மாநாட்டில் வெளிநாடுகள் பங்கேற்பது குறித்து இந்தியாவில் உள்ள அந்நாடுகளின் தூதர்களுடன் வட்டமேஜை கூட்டத்திற்கு உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லியில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ள உலக உணவு இந்தியா 2023  மாநாடு நவம்பர் 3-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில், இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு  2023-ன் ஒரு பகுதியாக இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு உணவுப் பதப்படுத்துதல் செயலாளர் திருமதி  அனிதா பிரவின், வெளியுறவு அமைச்சக சிறப்பு செயலாளர் திரு பிரபத் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். வெளிநாடுகளின் தூதர்கள், துணைத்தூதர்கள், இதர உயர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இந்தியாவின் தனித்துவ பங்களிப்பு குறித்தும், பெருமளவிலான வளங்கள், நுகர்வோர்கள் ஆகியோர் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

***



(Release ID: 1932714) Visitor Counter : 120