பாதுகாப்பு அமைச்சகம்

தற்சார்பு இந்தியா: இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 500 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது

Posted On: 15 JUN 2023 5:09PM by PIB Chennai

உள்நாட்டுப் பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையிலும், தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் தனியார் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் 1035 எண்ணிக்கையிலான 5/7.5 டன் வானொலி ஒலிபரப்பு தொலைத்தொடர்பு உபகரண பெட்டகங்களை கொள்முதல் செய்தற்காக ஹைதராபாத்தில் உள்ள ஐசிஓஎம்எம் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் 2023, ஜூன் 15 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.500 கோடியாகும். நடப்பு 2023-24-ம் நிதியாண்டில் இருந்து பெட்டகங்களின் விநியோகம் தொடங்கும்.

இது இந்திய ராணுவத்தின் மொபைல் தொலைத் தொடர்பின் நீண்டகால தேவையை நிறைவேற்றும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932615

***

AD/IR/RS/GK(Release ID: 1932692) Visitor Counter : 126