பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படையின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி “ஜூல்லே லடாக்” (ஹலோ லடாக்)
Posted On:
15 JUN 2023 2:03PM by PIB Chennai
இளைஞர்களிடமும், குடிமக்களிடமும் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், லடாக்கில் “ஜூல்லே லடாக்” (ஹலோ லடாக்) என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சியை இந்தியக் கடற்படை நடத்தி வருகிறது. 5 ஆயிரம் கிலோ மீ்ட்டர் தொலைவிலான இருசக்கர வாகனப் பேரணியை 2023 ஜூன் -15 அன்று தேசியப் போர் நினைவிடத்தில் இருந்து கடற்படை துணைத் தளபதி அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக வடகிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட இதேபோன்ற முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.
வடக்குப் பிராந்தியத்தில் இதுபோன்ற முன்னெடுப்புகளை நடத்துவதற்கான நோக்கங்கள்:-
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடுதல் (இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு)
அக்னிபத் திட்டம் உள்பட இந்தியக் கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து லடாக் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
இந்தியக் கடற்படையில் சேருவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்துதல்.
இந்த மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளில் கடற்படையின் இசை நிகழ்ச்சி, மருத்துவ முகாம், கடற்படை-லடாக் கால்பந்து கிளப் இடையே கால்பந்துப் போட்டி ஆகியவையும் இடம்பெறுகிறது.
இந்த இருசக்கர வாகன பேரணியில் இந்தியக் கடற்படை அதிகாரிகள், மாலுமிகள், குடும்ப உறுப்பினர்கள் உள்பட 35 பேர் இடம் பெற்றுள்ளனர். பேரணி செல்லும் வழியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாட உள்ளனர். அத்துடன், கார்கில் போர் நினைவிடத்திலும், 1962-ம் ஆண்டு ரசாங் லா போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கும் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932552
***
AD/IR/RS/GK
(Release ID: 1932609)
Visitor Counter : 194