நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெயின் அடிப்படை இறக்குமதி வரி 5% குறைக்கப்பட்டுள்ளதால் சமையல் எண்ணெய்க்கான செலவு நுகர்வோருக்கு குறைகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUN 2023 1:34PM by PIB Chennai

நுகர்வோர்களுக்கு சமையல் எண்ணெய் குறைவான விலையில் கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், சமையல் எண்ணெய்களின் அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, உணவு மற்றும் பொது விநியோகத்துறை 2023, ஜூன் 14 அன்று வெளியிட்ட அறிவிக்கையின் படி, சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி வரி 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல்  அமலுக்கு வந்த இந்த வரி குறைப்பு, 2024, மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.

அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவினால் உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரிக் குறைப்பு நுகர்வோர்களுக்கு பயனளித்து, உள்நாட்டு சந்தையில் சில்லரை விலை குறைய உதவும்.

கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி வரி 32.5 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சர்வதேச அளவில் விலை மிகவும் அதிகரித்த போது, உள்நாட்டு சந்தை விலையிலும் அது பிரதிபலிக்கிறது.

நுகர்வோர்களுக்கு தேவையான அளவு கிடைக்கும் வகையில், நாட்டில் சமையல் எண்ணெய் விலைகளை  உணவு மற்றும் பொது விநியோகத்துறை உன்னிப்பாகக்  கண்காணித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932542

***

AD/IR/RS/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1932607) வருகையாளர் எண்ணிக்கை : 333
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Odia , Telugu