எரிசக்தி அமைச்சகம்
பிரான்ஸ் பிரதிநிதி மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சரை சந்தித்து சர்வதேச எரிசக்தி மாற்றத்தை அடைவதற்கான ஒருங்கிணைப்பு குறித்து விவாதித்தார்
Posted On:
14 JUN 2023 11:34AM by PIB Chennai
மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர் கே சிங்கை, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கிரிசோலா சஜரோ போலோ ஜூன் 13 அன்று சந்தித்து சர்வதேச எரிசக்தி மாற்றத்தை அடைவதற்கான ஒருங்கிணைப்பு குறித்து விவாதித்தார். அவருடன் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன் சென்றிருந்தார்.
சர்வதேச எரிசக்தி மாற்றம், சூரிய எரிசக்தி ஆகியவற்றை அடைவதற்கான ஒருங்கிணைப்பு குறித்து முக்கியமாக விவாதித்தனர்.
அப்போது பேசிய மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர், சர்வதேச சூரிய கூட்டமைப்பு மேலும் பல சூரிய எரிசக்தித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிதன் அவசியம் என்று கூறினார். பொருளாதார ரீதியாக வலிமையாக உள்ள நாடுகள், புதுப்பித்தக்க எரிசக்திக்கான நிதிகளை தாமே ஏற்படுத்திக்கொள்ளும் என்றும், நிதி தேவைப்படும் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள நாடுகளுக்கு நாம் உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் சுமார் 50 சதவீத பகுதிகளில் மின்சார வசதி கிடையாது என்பது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். எரிசக்தி மாற்றத்திற்கிடையே, அனைவருக்கும் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று திரு ஆர் கே சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932198
----------
AD/IR/RS/GK
(Release ID: 1932389)
Visitor Counter : 161