கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மும்பையில் உள்ள நவீன ஓவிய தேசிய கலைக்கூடத்தில், ‘மகாராஜாவின் களஞ்சியம்: புகழ்மிக்க ஏர் இந்தியா சேகரிப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கலைப்படைப்புகள்’ என்று தலைப்பிடப்பட்ட கண்காட்சியை மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தொடங்கிவைத்தார்

Posted On: 14 JUN 2023 2:34PM by PIB Chennai

மும்பையில் உள்ள  நவீன ஓவிய தேசிய கலைக்கூடத்தில், ‘மகாராஜாவின் களஞ்சியம்: புகழ்மிக்க ஏர் இந்தியா சேகரிப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கலைப்படைப்புகள்’ என்று தலைப்பிடப்பட்ட கண்காட்சியை  மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி தொடங்கிவைத்தார்.  

விமானப்பயண அனுபவத்தை நினைவுக்குக் கொண்டுவர ஏர் இந்தியா நிறுவனம் பயன்படுத்திய ஜி ஆர் சந்தோஷ், பி.பிரபா, பில்லூ போக்கன்வாலா, எம் எஃப் உசேன், ராகவ் கனேரியா போன்ற பிரபல கலைஞர்களின் ஓவியங்கள், சிற்பங்கள் இந்த தனித்துவமான கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இந்த  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, 80 ஆண்டுகால ஏர் இந்தியாவின் வரலாற்றை ஓவியங்கள் மற்றும் கலைப்படைப்புகள்  மூலம் சித்தரிக்கும் இந்தக் கண்காட்சி  உண்மையில் மகாராஜாவின் சேகரிப்புத்தான் என்றார். கலைஞர்களுக்கு ஆதரவு அளித்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நாம் நன்றி செலுத்துவோம் என்று அவர் கூறினார்.

சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படும் காலத்தில் நமது  பாரம்பரியங்களை  அறிந்து பெருமைப்படுவது அவசியம் என்று  அவர் குறிப்பிட்டார்.   இந்தியா எப்போதும் வளமான கலைகள், கைவினைப் பொருட்கள், கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது என்றும்,  இது தொடர வேண்டும் என்றும்  அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நவீன கலைஞன் தேசிய கலைக்கூட இயக்குநர், நஸ்நீன் பானு,  ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசு முடிவெடுத்ததையடுத்து, இந்நிறுவனத்தின்  கலை வடிவங்கள் மற்றும் கலைப்பொருட்களை மத்திய கலாச்சார அமைச்சகத்திடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932266

----

AD/SMB/KPG/GK



(Release ID: 1932371) Visitor Counter : 138