மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜி20-ன் 4-வது கல்விப் பணிக்குழுக் கூட்டத்திற்காக இதுவரை 12 நாட்கள் நடைபெற்ற மக்கள் பங்கேற்பு நிகழ்வில், 1.57 கோடி மாணவர்கள், 25.46 லட்சம் ஆசிரியர்கள், 51.10 லட்சம் பொதுமக்கள் உள்பட 2.33 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Posted On: 12 JUN 2023 6:08PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்வி அமைச்சகத்தின் சார்பில் ஜி20-ன் 4-வது மற்றும் இறுதி கல்விப் பணிக்குழுக் கூட்டம், 2023, ஜூன் 19 முதல்  21 வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்த முன்னோட்ட நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி, பள்ளிக்கல்வி மற்றும்  எழுத்தறிவுத்துறை செயலாளர் திரு சஞ்சய் குமார், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை செயலாளர் திரு அதுல் குமார் திவாரி ஆகியோர்  செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது ஜி20-ன் 4-வது கல்விப்பணிக்குழுக் கூட்டம், அமைச்சகங்கள் நிலையிலானக் கூட்டம், மக்கள் பங்கேற்பு நிகழ்வு ஆகியவை குறித்து விளக்கினார்கள்.

இதுகுறித்துப் பேசிய திரு சஞ்சய் குமார், ஜி20-ன் 4-வது கல்விப் பணிக்குழுக் கூட்டத்திற்காக இதுவரை 12 நாட்கள் நடைபெற்ற மக்கள் பங்கேற்பு நிகழ்வில், 1.57 கோடி மாணவர்கள், 25.46 லட்சம் ஆசிரியர்கள், 51.10 லட்சம் பொதுமக்கள் உள்பட 2.33 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931730

********

AD/IR/RS/GK


(Release ID: 1931797) Visitor Counter : 149