சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவின் காம்கானில், அமராவதி-சிகாலி தேசிய நெடுஞ்சாலை 53-ல் ரூ. 816 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஷெலாட் முதல் நந்துரா வரையிலான பகுதியை திரு நிதின் கட்கரி திறந்துவைத்தார்

Posted On: 11 JUN 2023 1:50PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவின் காம்கானில், அமராவதி-சிகாலி தேசிய நெடுஞ்சாலை 53-ல் ரூ. 816 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள  ஷெலாட் முதல் நந்துரா வரையிலான பகுதியை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று திறந்துவைத்தார்.

குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், ஒடிசா மற்றும் நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்கு இடையே  முக்கியமான  வர்த்தக இணைப்பாக தேசிய நெடுஞ்சாலை 53 உள்ளது. மேலும், இந்த நெடுஞ்சாலை மகாராஷ்டிராவின் நந்துர்பார், துலே, ஜல்கான், (காம்கான்) புல்தானா, அகோலா, அமராவதி, நாக்பூர் மற்றும் பண்டாரா மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையாகும். ராய்ப்பூர்-நாக்பூர்-சூரத் அல்லது கிழக்கு-மேற்கு போக்குவரத்துக்கு நல்ல இணைப்பைக் கொண்டிருப்பதாலும்  இந்த நெடுஞ்சாலை முக்கியமானது.

சதர் ஷெலாட்-நந்துரா பிரிவின் நாற்கர சாலைத் திட்டத்தின் மொத்த நீளம் 45 கி.மீ. ஆகும். இதில் 14 கி.மீ. பசுமைவெளி புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள், 16 சிறு பாலங்கள், 63 கண்மாய்கள், 1 ரயில்வே மேம்பாலம், 8 வாகன சுரங்கப்பாதைகள், 2 பாதசாரி சுரங்கப்பாதைகள், 12 பேருந்து நிழற்குடைகள் ஆகியவை உள்ளன. புல்தானா மாவட்டத்தின் துணைக் கோட்டமான, சில்வர் சிட்டி என்றழைக்கப்படும் காம்கானின் புகழ்பெற்ற வெள்ளிச் சந்தைக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்தத் திட்டம் சுற்றுலா, சுகாதாரம், கல்வி மேம்பாட்டுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வழிவகுக்கும்.

***

SM/SMB/DL



(Release ID: 1931457) Visitor Counter : 160