மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

மீன் உணவுத் தொழிலின் நிலைத்தன்மை மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம்

Posted On: 11 JUN 2023 10:40AM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன் வளத்துறை , மத்திய அரசின் விடுதலையின் அமிர்தப்பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  ஜூன் 9 அன்று ‘மீன் உணவுத் தொழிலின் நிலைத்தன்மை மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம்’ என்ற தலைப்பில் இணைய கருத்தரங்குக்கு  ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சிக்கு மீன் வளத்துறையின் இணைச் செயலாளர்கள் திரு சாகர் மெஹ்ரா, டாக்டர். ஜே பாலாஜி ஆகியோர் இணைந்து தலைமை வகித்தனர். , இந்நிகழ்ச்சியில் மீனவ சமூகப் பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைவோர், மீன்பிடி சங்கங்கள், மீன்வளத் துறை அதிகாரிகள், மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறை அதிகாரிகள், மாநில விவசாயம், கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்கள், மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்கள், மீன்வளக் கூட்டுறவு சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ராவின் வரவேற்பு உரையுடன் கருத்தரங்கு தொடங்கியது. மீன் வளர்ப்பில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 70% மீன் மற்றும் ஓட்டுமீன்களுக்கு புரதம் நிறைந்த தீவனம் அளிக்கப்படுகிறது, இதில் மீன் உணவு முக்கிய மூலப்பொருளாக செயல்படுகிறது என்பதை அவர் விளக்கினார்.  மீன் உணவு என்பது உயர்தர புரதம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள் (பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்பு போன்றவை) மற்றும் பிற வளர்ச்சி காரணிகளைக் கொண்ட அதிக செறிவூட்டப்பட்ட சத்தான ஊட்டச்சத்துள்ள உணவாகும்.  அதன் ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக, இது பண்ணை விலங்குகளின் உணவில் புரதச்சத்தை அளிக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 20 மில்லியன் டன் மூலப்பொருள் மீன் உணவு மற்றும் மீன் எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

 

 

தொழில்நுட்ப அமர்வு, 'மீன் உணவுத் தொழிலின் முக்கிய பார்வை ' என்ற தலைப்பில் கலந்துரையாடலுடன் தொடங்கியது. கூட்டு உணவு உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு நிசார் எப். முகமது,  மீன் உணவின் முக்கியத்துவம் மற்றும் தரமான மீன் உணவை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பது குறித்து விளக்கினார். மீன் உணவில் மீன் கழிவுகளைப் பயன்படுத்துவது நீர் மாசுபாட்டைக் குறைப்பதுடன், விலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அவற்றின் இறப்பைக் குறைக்கிறது என்று அவர் கூறினார்.  இந்திய கடல் மூலப்பொருட்கள் சங்கத் தலைவர் திரு முகமது தாவூத் சைட்,  அவந்தி ஃபீட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. இந்திர குமார், ஐசிஏஆர் மூத்த விஞ்ஞானி டாக்டர். ஆஷிஷ் குமார் ஜா, ஐசிஏஆர்- சிஎம்எப்ஆர்ஐ முதன்மை விஞ்ஞானி ஆக்டர் ஏ.பி. தினேஷ்பாபு உள்ளிட்டோர் மீன்வளத்துறையில் முன்னேற்றம், மேள்கொள்ள வேண்டிய உத்திகள் பற்றி விரிவாக விளக்கினர்.

கருத்தரங்கில்,  நுண்ணறிவு கலந்த விவாதங்களின் மூலம், துறைசார் உத்திகள் மற்றும் செயல் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கை அம்சங்கள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் விவாதிக்கப்பட்டன.

***

SM/PKV/DL



(Release ID: 1931438) Visitor Counter : 148