கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச ஆவணக் காப்பக தினத்தையொட்டி இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் நமது மொழி, நமது பாரம்பரியம் என்ற கண்காட்சியை மத்திய அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி நாளை தொடங்கிவைக்கிறார்

प्रविष्टि तिथि: 08 JUN 2023 6:56PM by PIB Chennai

சர்வதேச ஆவணக் காப்பக தினத்தை இந்திய தேசிய ஆவணக் காப்பகம் 2023 ஜூன் 9 அன்று கொண்டாடுகிறது. இதையொட்டி சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா நிகழ்வின் கீழ்  நமது மொழி, நமது பாரம்பரியம் என்ற தலைப்பிலான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியை மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி ஜூன் 9 அன்று காலை 11 மணிக்கு  தொடங்கி வைப்பார்.

இந்தக் கண்காட்சியில் தத்துவார்த்த சூத்திரம், ராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை போன்றவற்றின் தொன்மையான மூலப்படைப்புகள் ஆவணக் காப்பக களஞ்சியத்தில் இருந்து காட்சிப்படுத்தப்படும். பிரபல ஆளுமைகளின் தனிப்பட்ட கையெழுத்து பிரதிகளும், இந்திய தேசிய  அருங்காட்சியகத்தின் நூலக சேகரிப்பிலிருந்து அரிய நூல்களும், கண்காட்சியில் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930843

**********


(रिलीज़ आईडी: 1930866) आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi