சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆரம்ப சுகாதாரமையங்கள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளமருத்துவ அதிகாரிகளுக்குத் திறன் மேம்படுத்த, மதுப்பழக்கம் இல்லாத கல்லீரல் வீக்கநோய்கள் குறித்த இணைய வழி கருத்தரங்கிற்கு சுகாதார அமைச்சகம் ஏற்பாடுசெய்திருந்தது
Posted On:
08 JUN 2023 1:32PM by PIB Chennai
ஆரம்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள மருத்துவ அதிகாரிகளுக்குத் திறன் மேம்படுத்த, மதுப்பழக்கம் இல்லாத கல்லீரல் வீக்க நோய்கள் குறித்த இணைய வழி கருத்தரங்கிற்கு சுகாதார அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த தேசிய கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து 7 ஆயிரம் மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் தலைமை உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், மருத்துவ அதிகாரிகள் சிறப்பான ஞானத்தையும், நிபுணத்துவத்தையும் பெறுவதற்கும் அவர்களின் திறன் கட்டமைப்புக்கும், இத்தகைய தனித்துவ வாய்ப்பு அவசியமானது என்றார். இதன் மூலம் மதுப்பழக்கம் இல்லாத கல்லீரல் வீக்க நோய்களால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தங்களின் திறனை விரிவுபடுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். இந்த நோயின் அபாயத் தன்மை, பொருத்தமான நோய் அறிதல் நடைமுறை, தரமான சிகிச்சை ஆகியவற்றுக்கு இத்தகைய கருத்தரங்கு பயன்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
சமூகத்துடன் நேரிடையாக தொடர்பு கொண்டிருப்பதால் ஆரம்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகளின் பங்களிப்பு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார். அதே சமயம், வாழ்க்கை முறை அடிப்படையிலான மாற்றங்களில் கவனம் செலுத்துவதோடு, ஒட்டு மொத்த சமூகத்துக்கும் சரியான தகவலை அளிப்பதிலும் அவை முக்கியத்துவம் பெறுகின்றன என்று திரு ராஜேஷ் பூஷன் குறிப்பிட்டார்.
கல்லீரல் வீக்க நோய் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனையாக இருப்பதையடுத்து தொற்று இல்லாத நோய்களை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தின் கீழ் இந்த இணைய வழி கருத்தரங்கு நடத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக மூன்று நாள் உறைவிட பயிற்சி திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930734
***
AP/SMB/RS/GK
(Release ID: 1930835)
Visitor Counter : 164