உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிவில் விமானப் போக்குவரத்துத்துறைஅமைச்சகத்தின் ஒன்பது ஆண்டுகால சாதனைகள்  -மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்

Posted On: 07 JUN 2023 6:00PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளில் சிவில் விமானப்போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்து அத்துறைக்கான அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா விரிவாக எடுத்துரைத்தார்.

முன்பு குறைந்த அளவிலான மக்களுக்கு கிடைத்துவந்த விமானச் சேவைகள் தற்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ், சாதாரண மக்களுக்கும் கிடைப்பதாகத் தெரிவித்தார். இந்தியா தற்போது விமானப்போக்குவரத்து சந்தையில் 3-வது பெரிய நாடாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  2014-ஆம் ஆண்டு 6 கோடியாக இருந்த உள்நாட்டு விமானப் பயணங்கள், 2020-ஆம் ஆண்டில் கொவிட்டுக்கு முன்பாக 14,30,00,000 ஆக அதிகரித்தது என்று அவர் கூறினார்.

சர்வதேச விமானப் பயணிகளின் எண்ணிக்கை 50% அளவிற்கு அதிகரித்திருப்பதாகவும் விமானங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டில் நாட்டில் 74 விமான நிலையங்களே செயல்பாட்டில் இருந்ததாக கூறிய அவர், தற்போது கூடுதலாக மேலும் 74 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை 220 ஆக அதிகரிக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உடான் திட்டத்தின் கீழ், 121.67 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு விமானப் பயணிகளுக்காக டிஜி யாத்ரா திட்டம்  செயல்படுத்தப்படுவதாகக் கூறிய அவர் இது தடையற்ற விமானப் போக்குவரத்தை பயணிகளுக்கு உறுதி செய்வதாகக் கூறினார்.  2022-ஆம் ஆண்டில் இந்த டிஜி யாத்ரா தில்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் 2023-ஆம் ஆண்டில் ஐதராபாத், கொல்கத்தா, புனே, விஜயவாடா ஆகிய விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930553

***

AP/PLM/KPG/GK


(Release ID: 1930580) Visitor Counter : 186