பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

நிலக்கரிமற்றும் பழுப்பு நிலக்கரி  கண்டறிதல்திட்டத்தைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 JUN 2023 3:00PM by PIB Chennai

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி  கண்டறிதல் தொடர்பான  மத்திய திட்டத்தைத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22-ஆம் நிதியாண்டிலிருந்து 2025-26-ஆம் நிதியாண்டு வரை 15-வது நிதி ஆணையத்தின் திட்டப்படி ரூ.2,980 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வு இரண்டு விரிவான நிலைகளில் நடத்தப்படுகிறது: (i) பிராந்திய ஆய்வு ஊக்குவிப்பு மற்றும் (ii) கோல் இந்தியா நிறுவன எல்லைக்கு உட்படாத பகுதிகளில் விரிவான ஆய்வு ஆகியவையாகும்.

இந்தத் திட்டத்தின் ஒப்புதல் மூலம் பிராந்திய ஆய்வு ஊக்குவிப்புக்கு ரூ.1650 கோடியும், கோல் இந்தியா நிறுவன (சிஐஎல்) எல்லை அல்லாத பகுதிகளில் விரிவான ஆய்வுக்காக ரூ.1330 கோடியும் ஒதுக்கப்படும். உத்தேசமாக, 1300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பிராந்திய ஆய்வின் கீழும், உத்தேசமாக 650 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிவான ஆய்வுத் திட்டத்தின்  கீழும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

நாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க உதவும் வகையில், நிலக்கரி வளங்கள் தொடர்பான ஆதாரங்களை நிரூபிக்கவும் மதிப்பிடவும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வு அவசியமானதாகும். இந்த ஆய்வின் மூலம் தயாரிக்கப்படும் புவியியல் அமைப்பு தொடர்பான அறிக்கைகள், புதிய நிலக்கரிச் சுரங்கத் தொகுதிகளை ஏலம் விட பயன்படுத்தப்பட்டு, அதன்பின் ஒதுக்கீடு பெறுபவர்களிடமிருந்து செலவு வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930445

****

AD/PLM/KPG/GK


(Release ID: 1930561) Visitor Counter : 173