விண்வெளித்துறை

இந்தியாவின் மூலம் இதுவரை 424 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டு, அதில் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் 389 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன

Posted On: 05 JUN 2023 6:35PM by PIB Chennai

இந்தியாவின் மூலம் இதுவரை 424 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டு, அதில்  கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் 389 செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், டிடி நியூஸ் தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் வெளிநாட்டு செயற்கைகோள்களை செலுத்தியதன் மூலம் கிடைத்த 174 மில்லியன்  அமெரிக்க டாலர்களில்  கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 157 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதேபோல், 256 மில்லியன் யூரோ வருவாயின் மோடி அரசின் ஒன்பது ஆண்டுகளில் மட்டும்  223 மில்லியன் யூரோ வருவாய் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். உலகில் இந்திய விண்வெளித்துறை விரைவாக முன்னேறி வருவதாகவும், மற்ற நாடுகள் தங்களது விண்வெளித் திட்டங்களை இதன் மூலம் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டதாகவும் கூறினார். இன்றும் அந்நாடுகள் தங்களது செயற்கைக் கோள்களை செலுத்த நமது சேவைகளையும், வசதிகளையும் நாடுவது  அதிகரிப்பதாக குறிப்பிட்டார். திருவனந்தபுரம், ஜம்மு மற்றும் அகர்தலாவில் உள்ள மையங்கள் மூலம் மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அவர்களில் 50 சதவீதம் பேர்  உயர்கல்விக்காக நாசா சென்றுள்ளனர் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930009

AD/IR/RS/GK



(Release ID: 1930053) Visitor Counter : 135


Read this release in: English , Urdu , Hindi , Telugu