நிதி அமைச்சகம்
நிதி மீட்பு நடவடிக்கையை வலுப்படுத்தல் மற்றும் உலகின் தென்பகுதிக்கு குரல் கொடுத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு கோவாவில் ஜி20 சர்வதேச நிதி கட்டமைப்பு பணிக்குழுவின் 3-வது கூட்டம் நடைபெறுகிறது
Posted On:
05 JUN 2023 5:12PM by PIB Chennai
நிதி மீட்பு நடவடிக்கையை வலுப்படுத்தல் மற்றும் உலகின் தென்பகுதிக்கு குரல் கொடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கோவாவில் ஜி20 சர்வதேச நிதி கட்டமைப்பு பணிக்குழுவின் 3-வது கூட்டம் 2023, ஜூன் 6,7 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவை பிரான்ஸ், கொரியா குடியரசு நாடுகளுடன் இணைந்து இரண்டு நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஜி20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள், விருந்தினர் நாடுகள், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.
இக்கூட்டத்தையொட்டி, மக்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதி எழுத்தறிவு முகாம்கள், விழிப்புணர்வு இயக்கங்கள், நாணய முகாம், வாக்கத்தான், தூய்மை இயக்கம், வினாடி-வினா போட்டி ஆகியவை நடைபெற உள்ளன. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929958
***
AD/IR/RS/GH
(Release ID: 1930048)
Visitor Counter : 190