சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்க அமைச்சகம், துணை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் வாழ்க்கை முறை விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 05 JUN 2023 5:51PM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சுரங்க அமைச்சகம், துணை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் வாழ்க்கை முறை விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. சுரங்கத்துறை செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், லைஃப் இயக்கம் குறித்த உறுதிமொழி செய்து வைத்தார். அன்றாட வாழ்க்கையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறையை அனைவரும் கடைப்பிடிக்க அவர் வலியுறுத்தினார். இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள  பல்வேறு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பணியாற்றுவோர் இதேபோன்று உறுதிமொழி ஏற்றனர்.

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு கருத்தரங்குகள், விழிப்புணர்வு பேரணிகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இணையதளம் வழியாக வினா-விடைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929979

***

AD/SMB/AG/GK


(रिलीज़ आईडी: 1930036) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu