அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பதேர்வா இந்தியாவின் லாவெண்டர் தலைநகராகவும், வேளாண் ஸ்டார்ட்அப் இடமாகவும் உருவெடுத்துள்ளது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்
Posted On:
04 JUN 2023 4:15PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(CSIR) -இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம்(IIIM) இணைந்து ஒரு வாரம் ஒரு ஆய்வகம் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளன
முதல் நாள் நிகழ்வாக லாவெண்டர் விழாவை டாக்டர் ஜிதேந்திர சிங் துவக்கி வைத்தார்
ஜம்முவின் பதேர்வாவில் இன்று 2 நாள் லாவெண்டர் திருவிழாவைத் தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். இது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம்... இந்தியாவின் லாவெண்டர் தலைநகராகவும், வேளாண் ஸ்டார்ட்அப் இடமாகவும் பதேர்வா உருவெடுத்துள்ளது என்றார்.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(CSIR) -இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஜம்மு(IIIM) தனது ஒரு வாரம் ஒரு ஆய்வகம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவின் ஊதா புரட்சியின் பிறப்பிடமாகவும், வேளாண் -ஸ்டார்ட்அப்களின் இலக்காகவும் பதர்வாவை டாக்டர் ஜிதேந்திர சிங் விவரித்தார்.
டாக்டர். ஜிதேந்திர சிங், இப்பகுதியில் லாவெண்டர் சாகுபடியைப் பற்றி குறிப்பிடுகையில், லாவெண்டர் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சியின் பல முன்மாதிரிகளுக்கான வழி என்று கூறினார்.
லாவெண்டர் சாகுபடி பல விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி, மனதின் குரலின் 99 வது பதிப்பில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முயற்சிகளைப் பாராட்டியதைக் குறிப்பிட்டார். ''பல ஆண்டுகளாக பாரம்பரிய மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தாலும், சில விவசாயிகள் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தனர். மலர் வளர்ப்பு, அதாவது பூ சாகுபடிக்கு மாறினர்.இன்று, இரண்டாயிரத்து ஐநூறு விவசாயிகள் இங்கு லாவெண்டர் பயிரிடுகின்றனர். மத்திய அரசின் அரோமா மிஷன் உதவியை எடுத்துரைத்த அமைச்சர், இந்த புதிய சாகுபடி விவசாயிகளின் வருவாயை வெகுவாக உயர்த்தியுள்ளது." என்றார்.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதும், வேளாண் ஸ்டார்ட் அப்களை உருவாக்குவதும் அரோமா மிஷன் திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நேரடியாகக் கண்காணித்து வருகிறார். அவரது வழிகாட்டுதலின் கீழ், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(CSIR) -இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஜம்மு(IIIM) பதேர்வா மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் லாவெண்டர் சாகுபடியை செயல்படுத்துகிறது.
அரோமா மிஷன் திட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்ட விவசாயிகளுக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லாவெண்டர் செடிகள் வழங்கப்பட்டது. லாவெண்டர் பயிரின் சாகுபடி, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அனைத்து தொழில்நுட்ப தொகுப்பும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் 2500க்கும் மேற்பட்ட விவசாயிகள் லாவெண்டர் பயிரிடுகின்றனர். பூக்களை அறுவடை செய்வதற்கும் பதப்படுத்துவதற்கும் பெண்கள் முதன்மையாக லாவெண்டர் வயல்களில் பணியமர்த்தப்படுகிறார்கள், இது இப்பகுதியில் பெண்களின் வருமானத்தை அதிகரித்துள்ளது. பல இளம் தொழில்முனைவோர் லாவெண்டர் எண்ணெய், ஹைட்ரோசோல் மற்றும் பூக்களின் மதிப்பு கூட்டல் மூலம் சிறு அளவிலான தொழில்களைத் தொடங்கியுள்ளனர் என்றார்.
மக்காச்சோளத்திலிருந்து லாவெண்டர் சாகுபடிக்கு மாறிய விவசாயிகளின் நிகர ஆண்டு வருமானம் ஹெக்டேருக்கு சுமார் ரூ. 40,000/- முதல் ரூ. 60,000/- என்றிருந்த வருமானம் ரூ. 3,50,000/- முதல் ரூ 6,00,000/-. வரை என உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
***
SM/CJL/DL
(Release ID: 1929751)
Visitor Counter : 219