ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மே 2023 வரை சுமார் 88% ஊதியம் ஆதாருடன் இணைக்கப்பட்ட நேரடிப்பயன் பரிமாற்றக் கணக்கு (எபிபிஎஸ்) மூலம் செலுத்தப்பட்டுள்ளது

Posted On: 03 JUN 2023 11:12AM by PIB Chennai

100% நேரடிப்பயன் பரிமாற்றக் கணக்கை ஆதாருடன் இணைப்பதை  (எபிபிஎஸ்) அடைய மாநிலங்கள் முகாம்களை ஏற்பாடு செய்து பயனாளிகளோடு தொடர்பில் இருக்க வேண்டும்.

பணிக்கு வரும் பயனாளியிடம் ஆதார் எண்ணை வழங்குமாறு கேட்க வேண்டும் என்றாலும் அதன் அடிப்படையில் பணி மறுக்கப்பட மாட்டாது.

தொழிலாளி எபிபிஎஸ்க்கு தகுதியற்றவர் என்ற காரணத்தின் அடிப்படையில் வேலை அட்டைகளை நீக்க முடியாது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டம், ஆதார் வாயிலாக இயக்கப்பட்ட கட்டணத்தை ஏற்கவில்லை - ஆதார் அடிப்படையிலான கட்டணப் பரிமாற்ற முறையைத் தேர்வு செய்துள்ளது.

பல சமயங்களில் பயனாளிகள் வங்கிக் கணக்கு எண்ணில் அடிக்கடி மாற்றம் செய்வதாலும், சம்பந்தப்பட்ட திட்ட அலுவலர் புதிய கணக்கு எண்ணை புதுப்பிக்காததாலும், பயனாளிகள் புதிய கணக்கு பற்றிய விவரங்களை உரிய நேரத்தில் சமர்பிக்காததாலுமே, ஊதியம் செலுத்தும் பல பரிவர்த்தனைகள் (பழைய கணக்கு எண் காரணமாக) இலக்கு வங்கி கிளையால் நிராகரிக்கப்படுகின்றன.

வெவ்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்ததில், அத்தகைய நிராகரிப்புகளைத் தவிர்க்க வழிவகை கண்டறியப்பட்டுள்ளது. நேரடிப் பயன் பரிமாற்றம்(DBT) மூலம் ஊதியம் செலுத்துவதற்கான சிறந்த வழி எபிபிஎஸ் ஆகும். பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்க இது உதவுகிறது.

திட்டத்தில், ஆதார் புதுப்பிக்கப்பட்டவுடன். தரவுத்தளம், இடம் மாற்றம் அல்லது வங்கி கணக்கு எண்ணில் மாற்றம் காரணமாக பயனாளி கணக்கு எண்களை புதுப்பிக்க வேண்டியதில்லை. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கு எண்ணுக்குப் பணம் செலுத்தப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டத்தின் கீழ், எபிபிஎஸ் ஆனது 2017 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. வயது வந்த ஒவ்வொருவருக்கும் ஆதார் எண் ஏறத்தாழ கிடைத்த பிறகு, இப்போது இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு எபிபிஎஸ்-ஐ நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எபிபிஎஸ் உடன் தொடர்புடைய கணக்கிற்கு மட்டுமே எபிபிஎஸ் மூலம் பணம் செலுத்தப்படும். அதாவது இது பாதுகாப்பான மற்றும் வேகமான பணப் பரிமாற்ற வழி ஆகும்.

மொத்தமுள்ள 14.28 கோடி பயனாளிகளில், 13.75 கோடி பேருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மொத்தம் 12.17 கோடி ஆதார் அங்கீகரிக்கப்பட்டு, 77.81% பேர் ஏற்கனவே எபிபிஎஸ்-க்கு தகுதி பெற்றுள்ளனர். 2023 மே மாதத்தில், சுமார் 88% ஊதியம் எபிபிஎஸ் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

100% எபிபிஎஸ்- ஐ அடைவதற்கு, முகாம்களை ஏற்பாடு செய்து பயனாளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு மாநிலங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணிக்கு வரும் பயனாளியிடம் ஆதார் எண்ணை வழங்குமாறு கேட்க வேண்டும் என்றும், ஆனால் இதன் அடிப்படையில் பணி வழங்க மறுக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளது.

தொழிலாளி எபிபிஎஸ்-க்கு தகுதியற்றவர் என்ற காரணத்தின் அடிப்படையில் வேலை அட்டைகளை நீக்க முடியாது.

ஏபிபிஎஸ், உண்மையான பயனாளிகளுக்கு உரிய தொகையைப் பெற உதவுவதுடன், போலி பயனாளிகளை களையெடுப்பதன் மூலம் ஊழலைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டம் ஆதார்-செயல்படுத்தப்பட்ட கட்டணத்தை ஏற்கவில்லை. இந்த திட்டம் ஆதார் அடிப்படையிலான கட்டணப் பரிமாற்ற முறையைத் தேர்வு செய்துள்ளது.

***

LG/JL/SG/DL

 



(Release ID: 1929619) Visitor Counter : 166