இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஒலிம்பிக் வீரர்கள் இளவேனில் வாலரிவன், பிரவின் ஜாதவ் ஆகியோரின் விளையாட்டு உபகரணங்களுக்கு தேவையான பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டங்களுக்கு எம்ஓசி அனுமதி
Posted On:
02 JUN 2023 4:55PM by PIB Chennai
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் பிரிவு, ஜூன் 1 அன்று ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலரிவன், வில்வித்தை வீரர் பிரவின் ஜாதவ் ஆகியோரின் விளையாட்டு உபகரணங்களுக்கு தேவையான பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
இளவேனில் தனது துப்பாக்கி பழுதுபார்த்தல் மற்றும் பெல்லட் சோதனைக்காக ஜெர்மனியில் உள்ள வால்தர் தொழிற்சாலைக்குச் செல்வார். பிரவின், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அவர் பயன்படுத்தும் இரண்டாவது செட் வில்வித்தை உபகரணங்களை வாங்குவதற்கும், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது ஒரு உபகரணம் பழுதுபட்டாலும், மற்றொரு செட் உபகரணத்தை பயன்படுத்த இயலும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஸ்ரீஜா அகுலா, நைஜீரியாவின் லாகோசில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய நிதி உதவிக்கான முன்மொழிவுக்கும் எம்ஓசி ஒப்புதல் அளித்தது.
ஸ்ரீஜாவின் விமான டிக்கெட்டுகள், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து, விசா செலவுகள் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் போன்ற பிற செலவுகளுக்கு இலக்கு ஒலிம்பிக் போடியம் திட்டம், நிதியளிக்கும்.
***
(Release ID: 1929510)
Visitor Counter : 142