மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
விலங்கு நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைக் குறைக்க சிறந்த கால்நடை சுகாதார சேவைகளை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது
Posted On:
02 JUN 2023 5:08PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, ஸ்ரீநகரில் இன்று தனது அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் இடைநிலைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்கள் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், டாக்டர் எல்.முருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
"நடமாடும் அலகுகள் மூலம் கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் நாட்டில் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துதல்" ஆகியவற்றின் பல்வேறு அம்சங்கள் குறித்து குழு விவாதித்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில், இந்தியாவில் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு வளம் உள்ளது. இது கிராமப்புற மக்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, விலங்கு நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பைக் குறைக்க சிறந்த கால்நடை சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
100% மத்திய உதவி மற்றும் சீரான கட்டணமில்லா எண் 1962 உடன், குறிப்பாக நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகளுக்கு துறை எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். உறுப்பினர்களால் வழங்கப்பட்ட மதிப்புமிக்க ஆலோசனைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை தமது துறை உறுதி செய்யும் என்று குழுவிடம் அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929390
***
SM/PKV/GK
(Release ID: 1929489)
Visitor Counter : 161