பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் கடல்சார் பயிற்சி மேற்கொண்டு வரும் ராயல் சவுதி கடற்படையின் வீரர்களுடன் கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஹரிகுமார் கலந்துரையாடினார்

Posted On: 02 JUN 2023 9:44AM by PIB Chennai

கொச்சியில் உள்ள  தெற்கு  கடற்படை தலைமை தளத்தில் கடல்சார் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சவுதி அரேபியாவின் கிங் ஃபாட் கடற்படை அகாடமியின் வீரர்களுடன் இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரிகுமார் கலந்துரையாடினார்.  இந்த கடல்சார் பயிற்சியில் ஐ.என்.எஸ் டிர் மற்றும் ஐ.என்.எஸ் சுஜாதா ஆகிய கப்பல்கள் அடங்கிய இந்திய கடற்படையின் முதல் பயிற்சி பிரிவில் ராயல் சவுதி கடற்படையின் 55 வீரர்களும், 5 அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். நடைபெற்று வரும் பயிற்சிகள் குறித்து கடற்படை தலைமைத் தளபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்திய கடற்படை கப்பல்களில் தங்கி, வீரர்கள் 10 நாள் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். அவசரகால ஒத்திகை, தீயணைப்பு உள்பட பல்வேறு வகையான  பயிற்சிகள் வீரர்களுக்கு அளிக்கப்பட்டது.  பாய்மர கப்பல்களில் உள்ள சவால்களை வீரர்கள் தெரிந்து கொள்வதற்காக ஐ.என்.எஸ் சுதர்ஷினி என்ற பாய்மர பயிற்சி கப்பலில் இரண்டு நாள் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

போர்க்கப்பல்களில் தங்களது முதல் பயிற்சி அனுபவத்தை அட்மிரல் ஹரிகுமாருடன் வீரர்கள் பகிர்ந்து கொண்டனர். இரு நாடுகளின் கடற்படை இடையே நீண்ட காலமாக உள்ள நெருங்கிய உறவு மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்திய கடற்படை தலைமைத் தளபதி, கூட்டுப் பயிற்சிகள், அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர பயிற்சி ஆகியவை ஆண்டு வாக்கில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பது, இரண்டு கடற்படைகள் இடையேயான உறவு வலுவடைந்திருப்பதை உணர்த்துகிறது, என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929222

***

 

AD/BK


(Release ID: 1929320) Visitor Counter : 141