கலாசாரத்துறை அமைச்சகம்

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வும் ஒரு பகுதியாக தெலங்கானா உருவான தினத்தைக் கொண்டாட கோல்கொண்டா கோட்டையில் 2 நாள் கொண்டாட்டம்

Posted On: 01 JUN 2023 5:59PM by PIB Chennai

சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்வின் கீழ், தெலங்கானா மாநிலம் உருவான தினத்தை கோல்கொண்டா கோட்டையில் கொண்டாட மத்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. நாளை (ஜூன் 2ஆம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கும் நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த விழாவை மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்வில் புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சிகள், திருமதி ஆனந்தாஜி மற்றும் அவரது குழுவினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், மஞ்சுளா ராமசாமி மற்றும் அவரது குழுவினரின் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பிரபல தெலுங்கு பாடகர்களான திருமதி மங்கிலி மற்றும் திருமதி மதுப்ரியா ஆகியோரின் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பாடகர் ஷங்கர் மகாதேவனின் தேசபக்தி பாடல்களுடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்.

ஜூன் 3-ம் தேதி, திம்சா, தப்பு, போனலு, குஸ்ஸாடி உள்ளிட்ட நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். கூடுதலாக, ராஜா ராம் மோகன் ராய் பற்றிய ஒரு நாடகம் நடைபெறவுள்ளது.

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இது சுதந்திரத்திற்குப் பிறகான நாட்டின் 75 ஆண்டு பயணத்தை கொண்டாடும் ஒரு நினைவு இலக்காகும். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 1.78 லட்சத்திற்கும் அதிகமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929108

***



(Release ID: 1929189) Visitor Counter : 107