பிரதமர் அலுவலகம்

அமிர்த காலத்தில் ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்

Posted On: 01 JUN 2023 6:26PM by PIB Chennai

வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில் வறுமை என்பது அரசுகளின் முக்கியமான கவலையாக உள்ளது. இந்தியா போன்ற வளரும் நாட்டில் வறுமையை ஒழிப்பது அரசுக்கு சவாலாக உள்ளது. பிரதமர் மோடியின் ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற குறிக்கோளுடன் அனைவருக்கும் சமூக நலன் என்பதில் பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. எவரும் விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்யவும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் தாக்கமும் பயன்களும் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றடைவதை உறுதிப்படுத்தவும் 2014 முதல் பல வகையான  முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இலக்கு  நிர்ணயிக்கப்பட்ட பலன்கள் அனைவருக்கும் கிடைப்பதற்காக அரசின் பல்வேறு திட்டங்களின் திறன்மிக்க அமலாக்கம் காரணமாக நாடு முழுவதும் அனைவரையும் உள்ளடக்கியதான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரதமரின் இணையதளத்தில் இருந்து கட்டுரை ஒன்றை பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது.

“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற குறிக்கோளுடன் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் மற்றும் நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் வறுமை ஒழிக்கப்படுகிறது. #9YearsOfGaribKalyan”

------------------

AD/SMB/RS/GK



(Release ID: 1929174) Visitor Counter : 177