குடியரசுத் தலைவர் செயலகம்
நேபாள பிரதமர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
01 JUN 2023 6:00PM by PIB Chennai
இந்திய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை நேபாள பிரதமர் திரு. புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’ இன்று (ஜூன் 1, 2023) ராஷ்டிரபதி பவனில் நேரில் சந்தித்தார்.
நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றதற்கு பிரதமர் பிரசாந்தாவிற்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்தார். அவரது இந்திய வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா-நேபாள இருதரப்பு ஒத்துழைப்பு அண்மை ஆண்டுகளில் வலுப்பெற்று வருவதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு குறிப்பிட்டார். கொரோனா தொற்றுநோயின் கடினமான காலங்களிலும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பராமரிக்கப்பட்டது.
இந்தியா நேபாளத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான வளர்ச்சி-ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தியா எதிர்நோக்கியுள்ளதாகவும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.
மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929110
***
(रिलीज़ आईडी: 1929155)
आगंतुक पटल : 254