நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

ஏடிஎல்புதுமைத் தொழில் முனைவோர் 2023: அடல் புத்தாக்க இயக்கம் பதிவு செய்ய அழைப்பு

प्रविष्टि तिथि: 01 JUN 2023 4:33PM by PIB Chennai

அடல் புத்தாக்க இயக்கத்தின் அடல் புதுமை தொழில் முனைவோர் ஆய்வகத் திட்டத்தின் கீழ், கோடைக்கால வகுப்பாக ஏடிஎல் புதுமைத் தொழில் முனைவோர் 2023-க்கான பதிவை நித்தி ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கம் தொடங்கியுள்ளது.

ஜூன், ஜூலை மாதங்     களில் 7 வாரங்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் முகாம் மூலம் மின்னணு திறன்கள் மற்றும் கட்டமைப்புகளுடன் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற முகாமில் 5,000-க்கும் மேற்பட்ட புதுமைக் கண்டுபிடிப்புகள் குழுவினர் பங்கேற்றனர். அவர்களில் முதல் 100 பேர் இந்திய வர்த்தகப் பள்ளியின் மூலம் கல்வி உதவித்தொகைப் பெற்றனர். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ், கல்வி உதவித்தொகை மற்றும் இதர சிறப்பான வாய்ப்புகள் அளிக்கப்படும். பதிவு செய்ய கடைசி நாள் 2023 ஜூன் 5 ஆகும்.

இந்த முகாம் ஜூன் 8-ம் தேதி முதல் ஜூலை 24-ம் தேதி வரை நடைபெறும்.

ஒவ்வொரு வாரமும் மின்னணு திறன்கள், தயாரிப்பு மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் திறன்கள் குறித்து மாணவர்களுக்கு நிபுணர்கள் விளக்குவார்கள்.

மாணவர்கள் https://kid-ex.com/champions/atltnkr2023 என்ற இணையதளம் மூலம் தாங்களே பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களை https://kid-ex.com/pdf/ATL_Tinkerpreneur_2023_Brochure.pdf  என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929029

                                ***
AD/IR/KPG/GK


(रिलीज़ आईडी: 1929147) आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Telugu