மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனேவில் ஜி20 4வது கல்வி பணிக்குழு கூட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு

Posted On: 01 JUN 2023 2:56PM by PIB Chennai

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் மையமாக மக்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு வரும், மத்திய கல்வி அமைச்சகம் "அடிப்படை எண், எழுத்தறிவை உறுதி செய்தல் என்னும் தலைப்பில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நோக்கத்திற்கு இணங்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மக்கள் பங்கேற்பு  நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் ஏற்பாடு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்  போன்ற பல்வேறு பங்குதாரர்களிடையே ஜி-20 பற்றி பெருமித உணர்வை ஏற்படுத்தவும் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.  தேசிய கல்விக் கொள்கை பற்றி  ஜூன் 1 முதல் 15 ஆம் தேதி வரை பயிலரங்குகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு  திட்டமிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மாநிலம், மாவட்டம், தொகுதி, ஊராட்சி மற்றும் பள்ளி அளவில் பரவலாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

இதனைத் தொடர்ந்துஜூன் 19 முதல் 21 வரை மகாராஷ்டிராவின் புனேவில் 4வது கல்வி பணிக்குழு கலந்துரையாடல் மற்றும் 22  அன்று கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்துடன் முடிவடைகிறது.

***

 

AD/PKV/GK


(Release ID: 1929079) Visitor Counter : 208