பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை ஆயுத தளவாட தலைமை இயக்குனராக திரு பி உபாத்யாய் பதவியேற்றார்
Posted On:
01 JUN 2023 12:15PM by PIB Chennai
இந்திய கடற்படையின் ஆயுத தளவாட பிரிவின் தலைமை இயக்குநராக திரு பி உபாத்யாய் பொறுப்பேற்றுக் கொண்டார், மே 31 அன்று பணி ஓய்வு பெற்ற திரு கேஎஸ்சி ஐயரிடம் இருந்து அவர் பொறுப்பை ஏற்றார். 1989 ஜூலை 12-ல் கடற்படை ஆயுதப் பிரிவில் பணியில் உபாத்யாய் சேர்ந்தார்.
கடற்படையின் பல்வேறு பிரிவுகளில் பல பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். மின் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற அவர், ஏவுகணை தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவராவார்.
***
SRI/PKV/GK
(Release ID: 1929067)
Visitor Counter : 178